ஓக்கி புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 661 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 400 தமிழக மீனவர்களும் மற்றும் 261 கேரள மீனவர்களும் காணவில்லை என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 362 மீனவர்கள் உட்பட 845 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 30-ம் தேதி குமரி மற்றும் கேரளாவில் ஓகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. […]
பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக் கழகத்தில் 98 வயது நிரம்பிய ராஜ்குமார் வைஷ்யா நேற்று எம்.ஏ முதுகலை பட்டம் பெற்றார். மாநில ஆளுநர் ராஜ்குமாரின் இருக்கைக்கே வந்து அவருக்குரிய எம்.ஏ பட்டத்தை வழங்கினார். வாக்கர் உதவியுடன் நடக்கும் முதியவர் ராஜ்குமார் “இளைஞர்கள் மனம் தளராமல் முயன்றால் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் பெறலாம்” என்று அறிவுரை வழங்கினார்… source: www.dinasuvadu.com
மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் நாக்கை அறுத்துக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாகக் குருசாந்த் பட்டிதார் என்பவர் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, ஒவ்வொருவரும் தான் சார்ந்த மதத்தைப் பெருமையுடன் கூற வேண்டும் என்றும், பெற்றோர் யாரெனத் தெரியாதவர்களே மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அனந்தகுமார் ஹெக்டேயின் இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் குல்பர்க்கா மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினரும் தலித் […]
வடக்கு கர்நாடகாவில் விவசாயிகள் அமைப்புகளால் இன்று பந்த்துக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.கர்நாடக மாநிலத்தில் கல்சா-பந்தூரி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.இதனால் கோவா-பெல்காமுக்கும் இடையே பஸ் சேவைகள் இயக்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் காடாக் மற்றும் ஹுப்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காட்சி கிழே
குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததை தொடர்ந்து, மாநிலத்தின் முதல்வராக விஜய் ருபானி (61) , துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 18 அமைச்சர்கள் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். தலைநகர் காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் குஜராத்தின் 16-வது முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றார். இவருடன் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட 19 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் […]
டெல்லி: தமிழக விவசாயத்தை மேம்படுத்த உலக வங்கியிடம் மத்திய அரசு கடனுதவி பெற 318 மில்லியன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம் விவசாயம் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது… sources: www.dinasuvadu.com
டெல்லி:மத்திய அரசு தேசிய விலங்காக புலியே தொடரும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய விலங்குகள் நல அமைச்சகம் இதை எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. தேசிய விலங்காக சிங்கம், பசுவை மாற்றக்கோரி எந்த ஒரு பரிந்துரைகளும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது… sources: www.dinasuvadu.com
உத்தரப்பிரதேசம் : லக்னோ தலைநகரில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட மின்வெட்டால் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 நோயாளிகளுக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்கள் மருத்துவர்கள் .இச்சிகிச்சைக்கு பின் தரையில் படுக்க வைத்ததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்… sources; www.dinasuvadu.com
ஒடிசாவின் மாநிலத்தில் உள்ள அங்கலு என்ற பகுதியில் திறந்த குழியில் விழுந்த 3 வயது சிறுமி 8 மணி நேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.அங்கலு பகுதியில் உள்ள மூன்று வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள உள்ள திறந்த குழியில் விழுந்தார் .இந்நிலையில் அந்த சிறுமிமியை மீட்க மீட்புபடையினர் சுமார் எட்டு மணி நேரம் போராடி பின்னர் அந்த சிறுமியை மீட்டுள்ளனர் .நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுமி மீட்டதால் அந்த சிறுமி பின்னர் மருத்துவமனைக்கு […]
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.இதனால் டெல்லியில் இருந்து இயக்கப்படும் 10 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் 6 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த கடும் பனி மூட்டத்தால் சுமார் 30 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது மத்திய ரயில்வே நிர்வாகம்.
தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக, நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பரபரப்பின் இடையே தீவிரவாதத் தாக்குதல் அரங்கேறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வருவோரை முறையாக சோதனை செய்யவும், கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய நபர்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் பைகள் என அனைத்துமே சோதனைக்கு உட்படுத்துமாறும் […]
இந்தியா; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. அந்த வகையில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தரப்புக்கு ராணுவத்திர்க்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ருக் சக்ரி செக்டாரில் என்ற இடத்தில் இரு தரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் […]
நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்கள் முடிவில் பிஜேபி வெற்றிபெற்றது.இதனை தொடர்ந்து குஜராத் பாஜகவை சேர்ந்த விஜய் ருபானி முதல்வராக இன்று பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளது. இவர் குஜராத் மாநில முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி,பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஸா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மும்பையில் திடீரென 17 மாடி கட்டிடத்தில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில் சேதமடைந்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. source : www.dinasuvadu.com
80 வயதிலும் உத்திர பிரதேசத்தில் ஒரு மூதாட்டி துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந்து வருகிறது. அந்த பெண்மணி பர்காஷி தோமர் என்பவர்தான். இவருக்கு 80 வயது ஆகிறது. இதனை பொருட்டு அந்த மூதாட்டியிடம் பேட்டி கண்டபோது, தான் 60 வயது முதல் துப்பாக்கி சுடுவதாகவும். எங்கள் கிராமத்தில் வரதட்சணை கொடுமை கிடையாது. ஏனென்றால் தான் சுட்டுவிடுவதாக பயபடுகிறார்கள் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், ‘என்னை யாரும் படிக்க வைக்க இல்லை. சின்ன […]
“பசு நமது தாய் போன்றது. பசுவை கடத்தினாலோ அல்லது வதை செய்தாலோ அவர் நிச்சயமாக கொல்லப்படுவார்.” என பேசியுள்ளார் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ., (எமன்!) கயன் தேவ் அகுஜா. ஆனால் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராம்கர் பகுதியில் பசுக்களை கடத்திச் சென்றதாக கூறி ஜாகிர்கான் என்பவரை போலீஸ் கைது செய்தது. அதற்கு முன்னதாக ஜாகிர்கான் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்பதும் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மேற்சொன்னவாறு பதிலளித்துள்ளார் அந்த பிஜேபி எம்.எல்.ஏ.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தமிழகத்தில் உள்ள 7 பிரதான ஆறுகள் தொழிற்சாலைகளால் (ஆலைகளால்) வெளியிடப்படும் கழிவுகளால் மாசுபட்டு வருகின்றன என தமிழக அரசை எச்சரித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லுகிற மாசடையும் ஆறுகள்: பவானி காவேரி பாலாறு சரபங்கா தாமிரபரணி திருமணிமுத்தாறு வசிஸ்தா ஆகியவை ஆகும்.மேலும் இத்தகைய ஆறுகள் மேல் தனிக்கவனம் செலுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வெறும் 3 பரோட்டா மட்டும் தின்றால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பரோட்டா கொடுத்து, ரூ.1 லட்சம் சன்மானமும் கொடுகிறது டெல்ல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் உள்ள தபாஸ்யா பரோட்டா கடை. ரெம்ப சாதாரணமாக சொல்லிவிடலாம் 3 பரோட்டாதானே என்று. ஆனால் அதன் எடை 2 கிலோ உள்ளது. இந்த இராட்சத பரோட்டவைதான் 50 நிமிடத்திற்குள் விழுங்க வேண்டும்! இந்த பரோட்டாவின் விலை ரூ.400 மட்டுமே. இதேபோல், பரோட்டாக்கள் 180 ரூபாயிலிருந்து இறுகிறது. பலர் இந்த போட்டியில் இருவர் […]
பிரதமர் நரேந்திர மோடி தற்போது, புதிய மெட்ரோ ரயில்வே சேவையை தொடங்கிவைத்தார். இந்த மெட்ரோ ரயில்வே சேவையானது, டெல்லியை அடுத்துள்ள நொய்டா முதல் கல்காஜி மந்திர் வரை செல்லும். இந்த மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். source : www.dinasuvadu.com
சேலத்தை சேர்ந்த செல்வம், சத்தியராஜ் ஆகியோர் செம்மர கடத்தல் கும்பலிடம் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர், தங்கள் ஊருக்குச் செல்ல நேற்று முன்தினம் இரவு சித்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, ஊர்காவல் படை வீரராக பணிபுரியும் மோகன்ரெட்டி அங்கு வந்துள்ளார். செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி செல்வம், சத்தியராஜை தமது கூட்டாளிகளுடன் ஆட்டோவில் மோகன்ரெட்டி கடத்தியுள்ளார். பின்னர், ரூ.2.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த உறவினர்கள், சித்தூர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, […]