டெல்லி : ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் அண்மையில் தேர்தல் நிறைவடைந்தத. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தற்போது வரையில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு […]
டெல்லி : 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் பேரவை, அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு விருது அறிவித்திக்கிறது. மைக்ரோ RNA-ஐ கண்டுபிடித்ததற்காகவும், மரபணு ஒழுங்குமுறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காகவும் அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைக்ரோஆர்என்ஏக்களுக்கு மனித மரபணு குறியீடுகள் என்று இப்போது அறியப்படுகிறது. அவர்களின் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. […]
சென்னை : வடகிழக்கு பருவ மழை விரைவில் தமிழகத்தில் தொடங்க விருக்கும் நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது. அதன்படி, வரும் செப் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய […]
மும்பை : டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளில் உண்மையில்லை என்று தற்போது தனது சமூக அலுவலகத்தில் ரத்தன் டாட்டா விளக்கமளித்துள்ளார். தனது உடல் நலம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் குறிப்பிடுகையில், […]
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது 3 மணி நிலவரப்படி 49.13 % சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவரும், ஹரியானாவின் தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி, […]
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு , காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வழக்கம் போல இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில், 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே […]
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். மேலும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டின் கொழுப்பு , பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக மாநில ஆய்வு முடிவுகள் என்ற தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை உண்டாக்கின. இதனை அடுத்து, திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட […]
சென்னை : சமந்தா விவாகரத்து பற்றி தெலங்கானா அமைச்சர் சுரேகா பேசிய வீசியம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்து இருந்தார்கள். அதன்பிறகு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். […]
டெல்லி: ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 2 இளைஞர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். காயத்திற்கு கட்டுப்போட்ட பின், மருத்துவரை சந்திக்க வேண்டும் என கூறிய இளைஞர்கள் அவரது அறையில் சந்தித்து சுட்டுக்கொன்றனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், தலைநகர் டெல்லியிலேயே […]
பீகார் : கடந்த சில நாட்களாக நம் அண்டை நாடான நேபாளத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பீகாரிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பீகார் எல்லையில் உள்ள தடுப்பணையிலிருந்து லட்சக்கணக்கான கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், பீகாரில் உள்ள முக்கிய நகரங்கள், கிராமங்கள் என மொத்தம் 16 மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 10 லட்சம் மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.மேலும், ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட […]
டெல்லி : மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் (அக்.2,) இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் அடக்குமுறையில் இருந்த இந்தியர்களை அகிம்சை மூலம் போராட வைத்து சுதந்திரம் பெற்று தந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி). அன்பு, அகிம்சை, அமைதி, எளிமையின் அடையாளமான காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம், வாழ்த்து செய்தியை பகிர்ந்து […]
டெல்லி : கடந்த 2014ஆம் ஆண்டு இதே போல காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மை இந்தியா (Swachh Bharat)’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதும் , திறந்தவெளி மலம் கழிப்பதை அகற்றி தூய்மை கழிப்பறைகள் அமைக்கப்படுவதும் , நாட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிப்பிடும் வகையில், #10YearsOfSwachhBharat எனும் ஹேஸ்டேக்கை தனது […]
புனே : மகாராஷ்டிர மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை 6:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மூன்று பேரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என தெரிய வந்துள்ளது. ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வண்டிகள் […]
ஜம்மு-காஷ்மீர் : கடந்த மாதம் செப்-18 தேதி 24 தொகுதிகளுக்கு முதற் கட்டமாகவும், அதைத் தொடர்ந்து செப்-26ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையாக நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த […]
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மீனவர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்துள்ளனர். இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சமீபத்தில், இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 பேரை, 3 படகுகளுடன் சிறைபிடித்தது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த 37 மீனவர்களும் காங்கேசந்துறை […]
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தடை செய்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கட்சி தான் அதிகளவில் தேர்தல் நிதி பெற்றுள்ளது என்பது அதன் பிறகான தகவலில் தெரியவந்தது. பெரு நிறுவனங்களை வற்புறுத்தி, மத்திய அரசு அமைப்பான அமலாக்கத்துறை மூலம் மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்றதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது […]
மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகான ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலை அடுத்து இந்தாண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான முன் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். டெல்லியில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று செய்தியாளர்களிடம் மகாராஷ்டிரா தேர்தல் குறித்து கூறுகையில்,”மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில், 25 எஸ்.சி தொகுதிகள் மற்றும் 29 எஸ்.டி தொகுதிகள் […]
கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சமீபத்திய அறிக்கை ஒண்றில், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சந்தேகத்திற்கிடமான, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் மேலும் ஒரு எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால், கேரளாவில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாக […]
டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யபட்டது. வேகமாகப் பரவக்கூடிய இந்த வகை குரங்கு அம்மை, இந்தியாவில்| கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை தடுப்பு குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று […]
சென்னை : தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும், அனுமதி வழங்காமலும் மத்திய அரசு இருந்து வருவதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே விடுவிக்க முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். அதன்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லிக்கு செல்லும் ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு பிரதமரை நாளை சந்திக்கவுள்ளார். அப்போது தமிழக திட்டங்கள் […]