கடந்த தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான நம்பிக்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். பிரதமர் தலைமையில் கிராமப்புற மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற டி.டி.சி தேர்தலில் பாஜக வரலாறு உருவாக்கியுள்ளது எனவும் […]
ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை ஆயில் இந்தியா லிமிடெட் அதிகாரப்பூர்வ இணையத்தில் பெறலாம்: https://www.oil-india.com/ விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/Current_openNew.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜஸ்தான் RF/ WP / 11 (2020) ’என்பதைக் கிளிக் செய்து […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் உருவாகிவந்த தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அங்கீகாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இருப்பினும் இந்த கொரானா வைரஸை முழுவதுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல்வேறு ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு […]
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை 37 கி.மீ. மெஜந்தா […]
காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 136-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. […]
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மேலும் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு […]
பல ஹோட்டல்களில் பாதிக்கப்பட்டதால், தனது சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் எனும் நம்பிக்கையில், நொய்டாவில் கஃபே திறந்துள்ளார் திருநங்கை பெண்மணி. தற்போதைய காலகட்டங்களில் முன்பு போல பெண்களும் சரி, திருநங்கைகளும் சரி வீட்டுக்குள் முடங்கி கிடப்பது கிடையாது. தங்களுக்கான வாழ்க்கையை துணிந்து வாழ துவங்கி விட்டார்கள். பலர் சாதனைகளும் செய்து வருகிறார்கள். ஆண்களுக்கு இணையாக தங்களாலும் சாதிக்க முடியும் எனவும், சில கொடூரமான குணம் கொண்ட ஆண்களின் சீண்டல்களுக்கு ஆளாகியிருந்தாலும் சாதிக்கும் வெறியுடன் பல திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். அது […]
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, இந்தியாவில் ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரசை தடுக்க தடுப்பு மறுத்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்டராச்செனிகா நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை […]
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 200 பேர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி இரவு விருந்தில் பங்கேற்று, கொரோனா நெறிமுறையை மீறியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள போஜியூர் கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற விருந்து முறையான அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், “எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் இரவு 7 மணி முதல் அதிகாலை 1 […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்பினார்கள். பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது.அதாவது அகில இந்திய வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.ஆகவே 2019-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் […]
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். புதிய வகையான இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாகப் புதியதொரு பயண அனுபவத்தையும், மேம்படுத்தப்பட்ட இணைப்பையும் பெறலாம். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டின் […]
பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் சிங்கு எல்லை, காசிப்பூர் எல்லை மற்றும் திக்ரி எல்லை ஆகியவை பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் குளிரின் மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆர்ப்பாட்டங்களின் போது நாங்கள் ஒரு மாதமாக சும்மா உட்கார்ந்திருப்பதால், வெங்காயத்தை நம் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அதைப் பற்றி யோசித்தோம். இதனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட […]
கொரோனா வைரஸால்பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 190 நாட்கள் மூடப்பட்ட பின்னர், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21, அன்று சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, அதிகபட்சமாக 5,000 சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில், ஆக்ரா கோட்டையில் அதிகபட்சமாக 2,500 பேர் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகமும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையமும் (ஏ.எஸ்.ஐ) […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி – ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 32 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இதுதொடர்பாக மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தைகள் […]
உத்தரப்பிரதேசம்: புதிதாக திருமணமான மணப்பெண் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து ரூ.70,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளுடன் ஓடிவிட்டதாக காவல் துறையிடம் கணவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஷாம்லி மாவட்ட போலீசார் ரூ .70,000 மற்றும் குறிப்பிடப்படாத தொகை மதிப்புள்ள தங்க நகைகளையும் அவர் எடுத்துச் சென்றார், பாக்பாத்தில் உள்ள கிராமத்தில் மணப்பெண் பற்றி விசாரித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினரும் கிராமத்தில் காணவில்லை. தொடர்ந்து தேடுதல் நடவெடிக்கை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேற்கு டெல்லியின் மடிபூர், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நான்கு மணி நேரத்திற்குள் பைக் மற்றும் காரில் வந்த சில மர்ம நபர்கள் மூன்று ஏடிஎம் கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மர்ம நபர்களின் அடையாளத்தை சனிக்கிழமை இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இது ஹரியானாவில் உள்ள மேவாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாபி பாக், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா […]
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடி காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் அல்லது பிற மோட்டார் வாகன ஆவணம் முன்பே காலாவதியாகி விட்டால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடிக் காலம் […]
குடியரசு தின குண்டுவெடிப்பு தொடர்பாக ஜார்கண்டிலிருந்து கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டி கைது செய்யப்ட்டுள்ளார். குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) இன்று ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த தப்பியோடிய கும்பல் தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான அப்துல் மஜீத் குட்டியை கைது செய்தனர். 1997-ல் குடியரசு தினத்தன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தான் அமைப்பின் உத்தரவின் பேரில் தாவூத் அனுப்பிய வெடிபொருள் தொடர்பான வழக்கில் அப்துல் மஜீத் குட்டி சம்பந்தப்பட்டவர் […]
விழுப்புரம் ஆசிரியை குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை வீடியோவாக பதிவு செய்து வழங்கி தொலைபேசி மூலம் மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் உதவியாக இருந்ததும் மட்டுமில்லாமல் வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர். இந்நிலையில், இதனை அறிந்த பிரதமர் மோடி விழுப்புரத்தை சேர்ந்த தமிழாசிரியை ஹேமலதாவிற்கு […]
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்க தொடங்கி விட்டது.நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தொழில் முனைவோர் முன்வர வேண்டும். அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே […]