காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் இன்று.!

AK Anthony hoisted the flag at the party headquarters in Delhi today to mark the 136th founding anniversary of the Congress party.

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 136-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. மாநில காங்கிரஸ் அமைப்புகள் பேரணிகள், பிரசசாரங்கள் நடத்த வேண்டும். சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அனைத்து எம்.பி. எம்எல்ஏக்கள் மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.