திருமணத்திற்கு முன் கர்ப்பமானதால் மகளை கவுரவ கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய பெற்றோர்கள் கைது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கிஷுண்டாசூர் எனும் கிராமத்தில் கமலேஷ் மற்றும் அனிதா எனும் தம்பதியினர் தங்களின் மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரது மகள் பெற்றோருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த ஆணுடன் நெருக்கமாகவும் இருந்து வந்துள்ளார். அண்மையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அந்த கருவை கலைக்கும்படி மருத்துவரிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள் நண்பர்களுக்கு தெரிந்தால் தங்கள் கவுரவம் என்ன ஆகும் என அஞ்சிய அப்பெண்ணின் பெற்றோர்கள் செல்லும் வழியிலேயே இருந்த ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்துவிட்டு தள்ளி விட்டுள்ளனர். அப்பகுதியில் வந்த காவல்துறையினர் இறந்த சடலத்தை பார்த்து விசாரித்ததில் அப்பெண்ணின் பெற்றோரை கண்டறிந்து கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…