Categories: இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: மத்திய அமைச்சர்கள் நிலை என்ன?

Published by
பால முருகன்

மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெருவாரியான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்களின் கள நிலவரத்தை பற்றி பாப்போம்.

அமித் ஷா : குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் பாஜக சார்பாக போட்டியிட்ட  இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா 8,58,197 வாக்குகள் பெற்று 6,50,399 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சோனல் ராமன்பாய் படேலை விட முன்னிலை பெற்று வருகிறார்.

ராஜ்நாத் சிங் : உத்தரபிரதேச மக்களவை தொகுதியான லக்னோவில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சரான ராஜநாத் சிங் 2,78,873 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட சமஜ்வாதி கட்சியின் ரவிதாஸ் மெஹ்ரோத்ராவை (2,34,028 வாக்குக்கள்) விட 4,4845 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

ஸ்மிருதி இரானி : உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி சுமார் 2,56,811 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். முதலிடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் 3,59,647 வாக்குகள் பெற்று 1,02,836 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பியூஸ் கோயல் : மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள  நிலையில், 4,13,438 வாக்குகள் பெற்று முதலிடம் வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட பூஷன் பாட்டீல் 1,94,839 வாக்குகள் பெற்று 2,18,599 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருக்கிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…

18 seconds ago

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! “இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க” – முதல்வர் ஸ்டாலின்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…

22 minutes ago

“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு பழனிச்சாமி” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

46 minutes ago

இந்த 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…

1 hour ago

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…

2 hours ago

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

2 hours ago