பிரணாப் முகர்ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்..!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவர் கடந்த மாதம்10-ம் தேதி மூளை அறுவை சிகிக்சை காரணமாக டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
அப்போது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜி நேற்று மாலை காலமானார். பிரணாப் முகர்ஜி மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, துணைஜனாதிபதி, பிரதமர், ஆகிய முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந் நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் பிரணாப் முகர்ஜியின் உடல் ராணுவ மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
டெல்லியில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில் அவரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025