பிரதமர் பெருமிதம் : ஜல் ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு!
ஜல் ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தொடங்கிய திட்டம் தான் ஜல் ஜீவன். இந்த ஜல் ஜீவன் திட்டத்தின் ஒரு பகுதியான கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம குடிநீர் மற்றும் துப்புரவு குழுவுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் மட்டும் கிடைக்கவில்லை, கிராமங்கள் மற்றும் பெண்கள் என அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், சுதந்திரம் பெற்றதிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை நாட்டில் மூன்று கோடி வீடுகளுக்கு தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக இதுவரை 1.25 லட்சம் கிராமங்களில் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நம் நாட்டில் 80 மாவட்டங்களில் 1.25 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்து உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, நாங்கள் இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம் எனவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025