காரிலேயே பிரசவம் நடக்க உதவிய பெண் போலீஸ் அதிகாரியின் பெயரையே தன் குழந்தைக்கு சூட்டி நன்றி கடன் செலுத்திய தாய்.
ராஜஸ்தான் பார்மர் பகுதியை சேர்ந்த நைனு கன்வார் என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் தனது காரில் நைனுவை ஜோத்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியிலேயே கார் பழுதாகி நின்றுவிட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணிக்கு வலி அதிகரித்துள்ளது.
அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை கமிஷனர் ப்ரீத்தி சந்திரா, நைனுவை வேறொரு காரில் மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதை உணர்ந்து, காரையே பிரசவ வார்டாக மாற்றினார். அந்த காரை சுற்றி நான்கு புறமும் ஆண் காவலர் பிடித்தபடி மறைத்துக்கொள்ள, பெண் காவலர்கள் கர்ப்பிணி பெண்ணை கவனித்துக் கொண்டனர். மருத்துவர்களை அழைத்து வர சிலர் சென்ற நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே காரிலேயே சுக பிரசவம் நடந்தது. நைனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கும், தனது குழந்தைக்கும் ஈடு செய்ய முடியாத உதவியை செய்த பெண் போலீஸ் அதிகாரிக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், அந்த போலீஸ் துணை கமிஷனர் பெயரையே நைனு, தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார். இதுகுறித்து கூறிய துணை கமிஷனர், தனக்கு பெருமையாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு எப்போதும் தனது ஆசிர்வாதம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…