#Breaking: “80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு”- தலைமை தேர்தல் அதிகாரி!

80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் – 234 தொகுதிகள் , புதுவை – 30 தொகுதிகள், கேரளம் – 140 தொகுதிகள், மேற்குவங்கம் – 294 தொகுதிகள் ,அசாம் – 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.66 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
கடந்த தேர்தலை ஒப்பிடும் பொழுது, 34.73 சதவிகித வாக்கு பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.68 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று கூறினார்.
மேலும், கொரோனா நோயாளிகள், கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் வாக்களிக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக ஏப் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025