ஜன் தன் யோஜனா கணக்கில் இன்று முதல் ரூ.500 டெபாசிட்..!

Published by
kavitha

இன்று முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட் தொடங்கியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைத்ததை அடுத்து (மக்கள் நிதி திட்டம்) என்ற பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டம் ஆனது தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ்  கொரோனா நிவாரண நிதியாக ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் என்று அண்மையில் மத்திய நிதியமைச்சர்  அறிவித்திருந்தார்.

இந்நிலையில்  இன்று முதல் முதற்கட்டமாக  ரூ.500ஐ பயனாளிகள் கணக்குகளில் இருப்பு வைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. 

அதன்படி பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற எண்ணில் முடியும் வங்கி கணக்கு எண்ணிற்கு எல்லாம்  ரூ.500 இன்று வங்கியில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல வங்கி கணக்கு எண் இறுதியில் 2 அல்லது 3 என்று இருந்தால் அவர்களுக்கு (நாளை)ஏப்., 4ம் தேதி பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும், வங்கி கணக்கு எண் 4 அல்லது 5 என்ற எண்களில் முடிந்தால் ஏப்.,7-ம் தேதி பணம் செலுத்தப் படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வங்கி கணக்கு எண்களின் இறுதியில் 6 அல்லது 7 என்ற எண்கள் இருந்தால் ஏப்.,8ம் தேதியும், 8 அல்லது 9 என்ற எண்கள் இருந்தால் ஏப்.,9ம் தேதியும் பணம் செய்யப்படும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது

இதனைத் தொடந்து வங்கி ஊழியர்கள் சங்கம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை தற்போது விடுத்துள்ளது.

அதில்  மத்திய அரசு அளிக்கும்  500 ரூபாயானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் இதனை எடுக்க யாரும் அவசரம் காட்ட வேண்டாம் கொரோனா தாக்கம் தணிந்த பின்னர் கூட பயனாளிகள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.மேலும்  இந்த விவகாரத்தில் வங்கிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் பயனாளிகள் ஒத்துழைப்பு நல்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கோரி உள்ளது.ஒரு வேளை மிக அவசரத் தேவையாக ஜன் தன் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு பணம் தேவைப்பட்டால் ரூ பே கார்டு மூலம் எந்த ஏடிஎம் களில் வேண்டுமானாலும் ரூ.500 ஐ எடுத்துக்கொள்ளலாம் என்று அதற்கு எந்த கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

4 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago