பாஜகவுக்கு எதிராக 16 முதலமைச்சர்களும் ஒன்று சேருங்கள்! தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் அதிரடி கருத்து!

Published by
மணிகண்டன்
  • இந்தியாவின் தேர்தல் வித்தகர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
  • 2012-ல் நரேந்திர மோடியுடன் இணைந்து குஜராத் தேர்தலில் ஜெயிப்பதற்கான யுக்திகளை வகுத்துக்கொடுத்தவர்.

தமிழகத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேர்தலில் ஜெயிப்பதற்காக பல வியூகங்களை வகுத்து கொடுத்து இந்திய தேர்தலில் முக்கிய பங்காற்றியவர் பிரசாந்த் கிஷோர். இவரை தேர்தல் வித்தகர் என பல கட்சி தலைவர்களும் அழைக்கின்றனர். இவர் 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் மோடியுடன் இணைந்து பிஜேபி ஜெயிப்பதற்காக தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு பாஜக ஜெயிப்பதற்காக அதிதிலும் முக்கிய பங்காற்றினார்.

பின்னர், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பிஸியான பிரசாந்த் கிஷோர். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற உதவினார். மேலும் பஞ்சாப், ஆந்திரா, மேற்கு வங்கம் என பல முக்கிய தேர்தல்களிலும் தேர்தல் யுக்திகளை பகிர்ந்து கொடுப்பதில் முக்கிய புள்ளியாக வலம் வந்தார் பிரசாந்த் கிஷோர்.

இவர் பீகாரில் நிதேஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஐக்கிய ஜனதா தளம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை ஆதரிக்கும் வண்ணம் செயல்பட்டு வருவதால், தற்போது அந்த கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். இதனால்  இந்திய அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

அடுத்த ஆண்டு பீகார் மாநில தேர்தல் வர உள்ளதால், தற்போது பிரசாந்த் கிஷோர் அந்த கட்சியில் இருந்து வெளியேறி உள்ளது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இவர் அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கும் எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற பிஜேபி அல்லாத 16 முதலமைச்சர்களும் ஒரு அணியில் சேர வேண்டும் என கருத்து தெரிவித்தார். இந்த கருத்து  இந்திய அரசியல் வட்டாரத்தில் தற்போது புயலை கிளப்பியுள்ளது. மேலும், இன்னொரு பதிவில் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டமானது பணமதிப்பிழப்பு போல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியுடன் இணைந்து பாஜக ஜெயிப்பதற்காக தேர்தல் யுக்திகளை வகுத்து அதன் பின்னர், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து கொண்டு, அதனை அடுத்து அக்கட்சி நிலைப்பாடு பிடிக்கவில்லை என அக்கட்சியில் இருந்து விலகி, தற்போது பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

37 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago