Categories: இந்தியா

சோனியா செய்ததை ராகுல் செய்யமாட்டுகிறார்.. பிரசாந்த் கிஷோர் கருத்து!

Published by
பாலா கலியமூர்த்தி

Prashant Kishor: ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி செய்ததை ராகுல் காந்தி செய்யாமலே பிடிவாதமாக இருக்கிறார் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை தேர்தலுக்காக சில ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகவும், ஆனால் கட்சி தலைமை அதற்கு உடன்படவில்லை என்பதால் கிஷோர் விலகிவிட்டார் எனவும் தகவல் வெளியானது.

பிரபல ஊடகமாக பிடிஐ-க்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு சொல்லுபடியான வெற்றியை ராகுல் காந்தியால் பெற்று தர முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் கட்சியில் இருந்து விலகி இருக்கவோ, வேறொருவர் கட்சியை வழிநடத்தவும் அனுமதிக்காமல் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். என்னை பொறுத்தவரை இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.

எந்த வெற்றியும் பெற்று தர முடியாமல் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது, கட்சியில் இருந்து சற்று விலகி இருப்பது தவறு இல்லை. அதுதான் கட்சிக்கும் நல்லது. அதன்படி, 5 ஆண்டுகள் கட்சியை வழிநடத்த வேறு யாரையாவது அனுமதிக்க வேண்டும். ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி அதைத்தான் செய்தார்.

கடந்த 1991-ல் தனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்த சோனியா காந்தி, அப்போது நரசிம்ம ராவை பிரதமராக பொறுப்பேற்க அனுமதித்தார். எனவே, வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு மோசமான தோல்வி ஏற்பட்டால், ராகுல் காந்தி கட்சியில் இருந்து ஒதுங்கி அடுத்த 5 ஆண்டுகள் வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தங்களிடம் என்ன குறை இருக்கிறது என அறிந்துகொண்டு செயல்படுவது தான் ஒரு நல்ல தலைவனின் முக்கிய பண்பு. இது ராகுல் காந்திக்கும் தெரியும். உதவி தேவை என்பதை நீங்கள் உணரவில்லை என்றால் யாரும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதைச் செயல்படுத்தக்கூடிய ஒருவர் தான் தனக்குத் தேவை என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அது சாத்தியமில்லை எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

2 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

3 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

4 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

6 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

6 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

7 hours ago