#BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

Published by
Venu
  • நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
  • குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.

எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.இந்த மனு  ஜனவரி 14-ம் தேதி விசாரிக்கப்பட்டது. ஆனால் அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே அவர்களை  தூக்கிலிடப்படுவது உறுதியாகியது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால்  முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார்.மேலும் கருணை மனுவை  உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது. தற்போது நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதால் ,தூக்குத்தண்டனை உறுதியாகியுள்ளது.

Recent Posts

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

1 hour ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

1 hour ago

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…

2 hours ago

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…

2 hours ago

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…

3 hours ago

”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…

3 hours ago