ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

Trump - Tax -India

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் விதித்த ஜூலை 31-ஆம் தேதி கெடு நாளையுடன் முடியும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிபொருளை இந்தியா வாங்குவதால் அதிகவரி என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து  தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆக.1 முதல் நண்பன் இந்தியாவுக்கு 25% வரியும், ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் வணிகத்துக்காக அபராதமும் விதிக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், ”ரஷ்யாவிடம் இருந்து அதிக ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் கூடுதல் அபராத வரி விதிக்கப்படும். இந்தியா நண்பனாக இருந்தாலும், அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரியை விதிக்கிறது. இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் இந்தியாவுடன் குறைந்த வர்த்தகத்தையே செய்து வருகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை வாங்கி வருகிறது, இது சரியல்ல என்று டிரம்ப் முன்னதாக கூறினார். ரஷ்யா உக்ரைனை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியா ரஷ்யாவுடனான வர்த்தகத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது சரியான நடவடிக்கை அல்ல. எனவே, இந்த அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு, அமெரிக்கா இந்தியா மீது 25 சதவீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 22.8 சதவீதம் அதிகரித்து 25.51 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 11.68 சதவீதம் அதிகரித்து 12.86 பில்லியன் டாலர்களாகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்