நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி அமைக்க இலக்கு – பிரதமர் மோடி

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் சிகிச்சை பெரும் நோக்கில் சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும் கொரோனா பரவல் குறித்து அவர் கூறுகையில், கொரோனா இன்னும் நீங்கவில்லை. மக்கள் இதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025