ரஜினிகாந்த் தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி, ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வித்தியாசமான கதாபாத்திரங்கள், அனைத்து தலைமுறை ரசிகர்களையும், தனது நடிப்பால் கவர்ந்த ரஜினிகாந்த் ‘தலைவா’வுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கடின உழைப்பால் உயர்ந்த அவருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…