வெளுத்து வாங்கும் கனமழை: விரைந்து சீரமைக்க பிரதமர் மோடி உத்தரவு.!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, டெல்லி, இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை பாதிப்பு குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, பாதிப்புகளை விரைந்து சீர் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, உள்ளூர் நிர்வாகங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் உள்ள யமுனை உட்பட வட இந்தியாவில் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வட மாநிலங்களில் உள்ள பல நகரங்களில், பல சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கியுள்ளன.