பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொளி காட்சி மூலம் பீகாரில் ஒன்பது நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவைகளை தொடங்கி வைப்பார். இதன் மூலம் மாநிலத்தின் 45,945 கிராமங்களும் இணைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்த ஒன்பது நெடுஞ்சாலைத் திட்டங்களில் சுமார் 350 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை ரூ. 14,258 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற மாநிலத்தில் ரயில்வே, பாலங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மோடி அன்மையில் அடிக்கல் நாட்டினார்.
பீகாரின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சிறப்பு தொகுப்பை மோடி 2015 ஆம் ஆண்டில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பில் ரூ .54,700 கோடி மதிப்புள்ள 75 திட்டங்கள் அடங்கியுள்ளது. அவற்றில் 13 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும், 38 பணிகள் நடைபெற்று வருகின்றன, மற்றவை தொடங்கப்பட உள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…