மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Parliament new building

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் திறந்து வைக்க வாய்ப்பு என தகவல்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இம்மாத  பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ள புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு, மே 28ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மே 26, 2014 அன்று பதவியேற்றார். இந்த சமயத்தில், இன்று டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திடீர் பார்வையிட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள வசதிகளை பார்வையிட்டதோடு, பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

இதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இம்மாத  பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் புதிய கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டடம், 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்