மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளதால் பள்ளி கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா ஒரு வருடத்திற்கு மேலாக தற்போதுவரை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலமாக கல்வியைப் பயின்று வருகின்றன. அதிலும் குறிப்பாக பல 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருவதால் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பள்ளிகள் இயங்கினால் பள்ளியின் பராமரிப்பு, மின்சாரம், வாகனம் செலவு இவைகளுக்காக கட்டணம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் இயங்காத நிலையில் ஆன்லைன் மூலமாக கல்வியில் நடைபெற்று வருவதால் பள்ளியின் பராமரிப்பு, மின்சாரம், வாகனம் செலவுகள் இல்லை இதனால், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் சிபிஎஸ்இ பள்ளிகள் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளது. இதனால், தனியார் பள்ளி கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…