8 அடி உயர மனிதர் உயரத்தால் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள்.!

Published by
Ragi

இந்தியாவின் மிக உயரமான மனிதனான தர்மேந்திர பிரதாப் எதிர்க்கொள்ளும் சிக்கல்களை கூறியுள்ளார்.

இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற கன்னஸ் சாதனையை படைத்தவர் தர்மேந்திர பிரதாப் சிங்.  உத்திரப்பிரதேசம் மாநிலம் நர்ஹார்பூர் காசியாஹி கிராமத்தை சேர்ந்த தர்மேந்திர 8 அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்டவர். இந்த உயரம் வரம் இல்லை சாபம் என்று கூறுகிறார்.

45 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை . இதுகுறித்து தர்மேந்திர பிரதாப் சிங் கூறுகையில், பெண்கள் தன்னுடைய உயரத்தை பார்த்து திருமணம் செய்ய மறுப்பதாகவும் ,  ஆண்டுகள் செல்ல செல்ல ஒரு வாழ்க்கை துணையின் தேவையை உணருவதாக சோகத்துடன் கூறுகிறார்.

மேலும், முதுகலை பட்டம் வென்ற இவருடன் மக்கள் செல்ஃபி எடுத்து பணத்தையும், பரிசுகளையும் கொடுப்பார்கள் என்றும், டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸ் மற்றும் மும்பையின் கேட் வே ஆஃப் இந்தியாவிற்கு செல்கையில் அங்குள்ள சுற்றுலா பயணிகள் தன்னை பார்த்து ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து விட்டு பணம் கொடுப்பார்கள்.

தற்போது, கொரோனா ஊரடங்கால் செல்ல முடியவில்லை என்றும், அதனால் வருமானம் நின்று விட்டதாகவும் கூறிய தர்மேந்திர, எனது உயரம் காரணமாக என்னால் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல முடியாது. எனது உயரத்திற்கு ஏற்ற ஒரு வேலையோ அல்லது நிதியுதவி அளித்தோ உதவுமாறு உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர், கடந்தாண்டு மூட்டுவலி காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இருதரப்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அகமதாபாத் மருத்துவமனையில் செய்த போது, உயரம் காரணமாக மருத்துவமனையில் அவரது படுக்கை முதல் ஆபிரேஷன் தியேட்டர் டேபிள் வரை அனைத்துமே சென்னையில் இருந்து விஷேசமாக ஆர்டர் செய்து வரவலைப்பட்டதாம்.

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

7 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

8 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

9 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

9 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

9 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

11 hours ago