Categories: இந்தியா

ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவின் நிகழ்ச்சி நிரல்.!

Published by
கெளதம்

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்காக டன் கணக்கில் பூக்கள் மற்றும் சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விழாக்கோலம் பூண்டுள்ளது.

காலை முதல் பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது. கோயில் திறப்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வருகிறார்.

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவின் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காலை 10 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகியது. பின்னர், 10.30 மணி அளவில்  பிரதமர் மோடி வருகை தந்தார். காலை 10.55-க்கு பிரதமர் மோடி ராமர் கோவில் பூஜை நடக்கும் இடத்தை அடைந்தார். 7,000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர்.

காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயிலில் பிரதமருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர் கோவில் வளாகத்தை சுற்றிப்பார்க்கவுள்ளார்.  அதனைத்தொடர்ந்து கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கி, 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) நடைபெறுகிறது.

மதியம் 1 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக கோவில்வளாகத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார். மதியம் 2.10 மணிஅளவில் பகவான் சிவனின் புராதன மந்திர் புனரமைக்கப்பட்ட குபேர் கா திலாவை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இன்று பூஜை முடிந்த பிறகு, நாளை முதல் கோயில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

7 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

8 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

10 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

13 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

14 hours ago