என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ஜிதேஷ் ஷர்மா "மன்கட்" முறையில் ரன்-அவுட் ஆனதற்கான மேல்முறையீட்டை வாபஸ் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rishabh pant mankad

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 18.4 ஓவர்கள் முடிவிலே 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை (மே 29)-ஆம் தேதி நடைபெறவுள்ள குவாலிஃபயர் முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்த போட்டியில் பெங்களூர் வெற்றிபெற்றாலும்  லக்னோ வீரர் ரிஷப் பண்ட் செய்த ஒரு விஷயம் பெங்களூர் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. அது என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணி 228 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தியது. இந்தப் போட்டியில், ஒரு சர்ச்சைக்குரிய “மன்கட்” (Mankad) ரன்-அவுட் முயற்சி நடந்தது.

பெங்களூர் அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் ஷர்மா அதிரடியாக விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், அவர் 57 ரன்களில் இருந்தபோது லக்னோ  பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் ஜிதேஷ் ஷர்மா நின்றுகொண்டிருந்ததை பார்த்து வித்தியாசமான ஒரு பிளான் செய்து  மன்கட் முறையில் ரன்-அவுட் செய்ய முயன்றார்.

ஜிதேஷ் ஷர்மா லைன் குள் வருவதற்கு முன்பே திக்வேஷ் ரதி “மன்கட்” முறையில் ரன்-அவுட் செய்துவிட்டார். மூன்றாம் நடுவரிடம் ரிவியூ கேட்டிருந்தால் நிச்சயமாக அவுட் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த சமயம் தான் இதனை கவனித்த லக்னோ  கேப்டன் ரிஷப் பண்ட் இல்லை வேண்டாம் வேண்டாம் விடுங்கள் என்பது போல இந்த மேல்முறையீட்டை வாபஸ் பெற்றார், மேலும் மூன்றாவது நடுவர் ஜிதேஷை “நாட் அவுட்” என்று அறிவித்தார்.

இதனை பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தங்கம் உள்ளம் கொண்ட ரிஷப் பண்டுக்கு கரகோஷமிட்டு தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள். அது மட்டுமின்றி ஜிதேஷ் ஷர்மா ரிஷப் பண்டை கட்டி அனைத்து தனது நன்றியை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் என்ன மனுஷன்யா என ரிஷப் பண்டை பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்