ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.பிறகு சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை திகார் சிறையிலேயே சிதம்பரத்தை கைது செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார்.
நேற்று சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த விசாரணையை நாளை விசாரிப்பதாக நிதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் சிதம்பத்தை காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…