Categories: இந்தியா

பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்!

Published by
பால முருகன்

Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளைமறுநாள் முதல்  தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி  இன்று தேர்தல் பரபரப்புரை செய்தார். அப்போது 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் பிரதமர் மோடி என விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய ராகுல் காந்தி ” பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கு செய்ததை நாங்கள் கண்டிப்பாக விவசாயிகளுக்கு செய்வோம். நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் 25 பேரின் ரூ.16 இலட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்து இருக்கிறார். நாங்கள் இதனை விவசாயிகளுக்கு செய்வோம். நிச்சயமாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம்.

இப்படி பணக்காரர்களின் கடன்களை மோடி அவர்கள் தள்ளுபடி செய்து இருக்கிறார் ஆனால் ஏன் ஏழை விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி. மக்களும் இந்த கேள்வியை தான் கேட்கிறார்கள். அந்தப் பணம் 25 ஆண்டுகளுக்கான 100 நாள்கள் வேலைத் திட்டத்திற்கான பணத்துக்குச் சமம்.

என்னை பொறுத்தவரை நாட்டில் வெறும் 25 பேருக்கு மட்டுமே ஆட்சியை நடத்தி வருகிறார். நாங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு பயிற்சி பெறும் உரிமையை வழங்குவோம் எனவும்” ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Recent Posts

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

53 minutes ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

2 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

2 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

3 hours ago

சிரியாவுக்கு 41% இறக்குமதி வரி – ஷாக் கொடுத்த டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல நாடுகளின் மீது புதிய…

3 hours ago

கேரளா : பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன் – ஜூலைக்கு மற்ற அரசு திட்டம்?

கேரளா :  கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது…

4 hours ago