Congress MP Rahul Gandhi - PM Modi [File image]
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இந்த வார வெள்ளிக்கிழமை ஏப்ரல் 26இல் நடைபெற உள்ளது.
அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், தேசிய கட்சி தலைவர்கள் தங்கள் பிரச்சார வேலைகளை நாடு முழுவதும் தீவிரமாக தொடர்ந்து வருகின்றனர். டெல்லியில் இன்று ராகுல் காந்தி சமூகநீதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு பற்றியும், இந்தியாவில் உள்ள ஏழ்மை நிலை பற்றியும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் ஆட்சியில் அமரும் போது நிச்சயமாக நடைபெற்றே தீரும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் வெறுமனே சாதாரண கணக்கெடுப்பு கிடையாது. அது சாதிய, சமூக ரீதியில் மக்களின் பொருளாதாரநிலை பற்றியும் அறியும்படி கணக்கெடுக்கப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் நாட்டில் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும். நாட்டில் உள்ள 90 சதவீத மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும். பாஜக ஆட்சியின் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடி ரூபாய் கடன் வசூல் செய்யப்படும். 90 சதவீத நாட்டு மக்களுக்கு இந்த சிறிய தொகையானது செலவிடப்படும். இது எனது கியாரண்டி (உத்தரவாதம்) என டெல்லியில் நடைபெற்ற சமூகநீதி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…