ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடல்!

ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடுகிறார்.
இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் இன்று காலை 9 மணிக்கு கலந்துரையாட உள்ளேன். இந்நிகழ்ச்சியை எனது யூ டியூப்பில் காணலாம்.’ என பதிவிட்டுள்ளார்.
A conversation with Nobel Laureate, Abhijit Banerjee on the economic impact of the COVID19 crisis. https://t.co/dUrok8Wm3Q
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2020