காங். வெற்றிபெற்றால் பெண்களுக்கு இலவச பயணம்.! மீனவர்களுக்கு ரூ.10 லட்சம்.! ராகுல்காந்தி அறிவிப்பு.!

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, மீனவர்களுக்கு 10 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு திட்டம் ஆகியவற்றை கர்நாடக தேர்தல் கள வாக்குறுதிகளாக ராகுல்காந்தி கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு வார காலமே இருப்பதால், பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் கட்சி சார்பில் பிரதமர் , மத்திய அமைச்சர்கள் என்றும், எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் , எம்பிக்கள் , முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மங்களூரு, உடுபி பகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்றைய பிரச்சாரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் எனவும், மீனவர்களுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கான ஆயுள்காப்பீடு செய்து தரப்படும் எனவும் கூறி மக்கள் மத்தயில் வாக்கு சேகரித்தார்.