மணிப்பூர் விவகாரம்.! கார்கே, சோனியா காந்தி உடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை.!

உச்சநீதிமன்ற உத்தரவினை அடுத்து, ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. இதனை தொடர்ந்து மக்களவைக்கு இன்று ராகுல்காந்தி வருகை புரிந்தார். மக்களவை விவாதத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியால் அவையை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகாராஜுன கார்கே, சோனியா, காந்தி, கே.சி.வேணுகோபால் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் ஆகியோர் உடன் ராகுல்காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து மணிப்பூர் களநிலவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நாளை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் துவங்க உள்ளது.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பேசுவதற்கு ராகுல்காந்தி தற்போது ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.