ஹரியானாவில் லாரியில் பயணித்த ராகுல் காந்தி…! வீடியோ உள்ளே..!

லாரி ஓட்டுநர்கள் தங்களின் பணி நேரத்தில் சந்திக்கும் சிரமங்களை கேட்டறியும் விதமாக லாரியில் பயணித்த ராகுல் காந்தி.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிபோனது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தனது பதவி பறிபோனாலும், மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என ராகுல் தெரிவித்திருந்தார். அந்த வகையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில், லாரி ஓட்டுநர்கள் தங்களின் பணி நேரத்தில் சந்திக்கும் சிரமங்களை கேட்டறியும் விதமாக, ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணித்துள்ளார்.
Here is the video of @RahulGandhi riding in the truck, a passer- by noticed and shot the video. pic.twitter.com/aMnH93SFTW
— Sajid (@sajid_reja) May 23, 2023