வெங்காயம் விளைவது எப்படி என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டார்.
இந்த பேரணியில் ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தி இருந்தார். ராகுல் டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தியது குறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ராகுல்காந்தி கூறுகையில் , என் நலம் விரும்பி யாரோ ஒருவர் டிராக்டரில் சோபாவை வைத்துள்ளார். ஆனால், பிரதமரின் பயன்பாட்டுக்காக ரூ.8,000 கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமல்லாமல், சொகுசு படுக்கைகளே உள்ளது.அதை ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ராகுல் காந்தி சோபாவில் அமர்ந்து பயணம் செய்கிறார்.இவை அனைத்தும் நாடகமே. ராகுல் காந்திக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது.ராகுல் காந்திக்கு வெங்காயம் மண்ணுக்குள் விளையுமா அல்லது நிலத்துக்கு மேலே விளையுமா என்று கூட தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…