ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில் 4 வயது மிக்க ஒரு சிறுவன் தனது வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்கையில் அந்த தோட்டத்தில் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
தற்போது சிறுவன் 15 அடி ஆழத்தில் இருக்கிறான். அவனுக்கு தற்போது ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் அம்மாவட்ட ஆட்சியர் மீட்புப்பணிகளை கண்காணித்து வருகிறது.
தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது சிறுவன் சுஜீத்தை கடைசி வரை காப்பாற்ற முடியாமல் போனது தற்போதும் மனதை கணமாக்குகிறது. அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளையும் சரிவர பராமரித்து உபயோகப்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி இவ்வாறு நடைபெறுவது வேதனைக்குரியது.
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…