மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய இரண்டு வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டன. கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மசோதா நகலை கிழித்து எறிந்து, அவைத் தலைவர் மீது விதி புத்தகத்தை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கொரோனா பாதிப்புக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் முதல் நாளே தாக்கல் செய்யப்பட்டன. மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக துணைத் தலைவர் அறிவித்தார். டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியதை துணைத்தலைவர் நிராகரித்தார்.
இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். டெரிக் ஓ பிரைன் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினார். துணைத் தலைவரின் மேசையில் இருந்த பொருட்களை தட்டி விட்ட எம்பி.க்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். இந்த அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதோடு, அவையை இன்று காலை 9 மணி வரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஸ் தெரிவித்தார். ‘இது நாடாளுமன்றத்தின் கருப்பு நாள்.’ என முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்றத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…