உத்தரபிரதேசம் உன்னாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்னர் அதே கும்பலால் அந்த இளம்பெண் சமீபத்தில் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்நிலையில் மீண்டும் உத்தரபிரதேசத்தில் இது போன்ற சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உபிபூர் கிராமத்தில் 18 வயது இளம்பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருந்தபோது அந்த இளம்பெண் வீட்டின் அருகில் இருந்த மேவலால் என்பவர் இளம்பெண் வீட்டில் புகுந்து. அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
பின்னர் அவரின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார். இதை அடுத்து அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு கான்பூரில் உள்ள மருத்துவமனையில் 90 சதவீத தீக்காயத்துடன் அனுமதித்தனர்.தகவல் அறிந்த போலீசார் மேவலாலை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் , கைது செய்யப்பட்ட நபரும் தூரத்து உறவினர்கள்.
அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் , ஆனால் பெண் வீட்டார் சம்மதிக்காததால் நேற்று முன்தினம் பஞ்சாயத்து கூட்டி இருவரையும் பிரித்து வைத்தனர். இதனால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…