கனமழை வெள்ளத்தால் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ரெட் அலார்ட்!

மும்பையில் கன மழை வெள்ளத்தால் மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பல்வேறு இடங்களில் இன்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. காலை தொடங்கியும் தற்போது வரை சில இடங்களில் மழை நீடித்துக் கொண்டே தான் உள்ளது. விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் முக்கிய இடங்கள் பல மும்பையில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் அத்தியாவசியமாக பணிகளுக்கு செய்பவர்களுக்காக இயங்கும் புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவசர சேவைகளில் செயல்படக்கூடிய அரசு அலுவலர்கள் தவிர ஏனைய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மேலும் கனமழை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025