2021 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவில் 5 ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் தொடக்க உரையில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் எளிதில் வழங்கக்கூடிய வகையில் இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சமுதாயமாக மாற்றுவதற்கான தனது யோசனைகளை ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி பகிர்ந்து கொண்டார். உலகின் சிறந்த டிஜிட்டல் இணைக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.மேலும் இந்த டிஜிட்டல் பயன்பாட்டில் முன்னிலை வகிக்க, 5G-யின் ஆரம்ப வெளியீட்டை விரைவுபடுத்துவதற்கும், அதை மலிவு மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று அம்பானி கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி நெட்வொர்க் உள்நாட்டில் வளர்ந்த நெட்வொர்க் என்றும் வன்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும் என்று அம்பானி கூறியுள்ளார்.
2 ஜி நெட்வொர்க்கில் உள்ள பின்தங்கிய மக்கள் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை நடவடிக்கைகளை அவசரமாக அரசு செய்ய வேண்டும் என்று அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.”இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய சமுதாயத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேகத்தை அதிகரிக்கும்போது, டிஜிட்டல் வன்பொருளுக்கான தேவை மிகப்பெரிய அளவில் வளரும். சிப் வடிவமைப்பில் இந்தியா உலகத்தரம் வாய்ந்த பலங்களை உருவாக்கியுள்ளது.டிஜிட்டல் வன்பொருளின் பெரிய அளவிலான இறக்குமதியை இந்தியா நம்பக்கூடாது என்று மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார் அம்பானி.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…