இன்றுமுதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு! விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டது.
தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 10,12ம் வகுப்புகளுக்கு 3 நாள்களும், 9,11ம் வகுப்புக்கு 3 நாள்களும் என வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் இயங்கும் என்றும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025