Shibu Soran: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் டெல்லி மருத்துவமனையில் அனுமதி.!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும், முன்னாள் முதல்வருமானஷிபு சோரன் உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக புதுடெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷிபு சோரனின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘குருஜி’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்கண்ட் முதல்வராகப் பணியாற்றினார்.
எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர், இப்போது ராஜ்யசபா எம்.பி. யாக உள்ளார்.