மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் ஆளுநரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று கட்சிகளும் ஆட்சியமைக்க உறுதியுடன் உள்ள நிலையில் இன்று ஆட்சியமைக்க உரிமை கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…