நாட்டில் பழிக்குப்பழி என்று கொலை செய்யப்படுவதில் பெங்களூர் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வெளியான தகவல் படி: ஆதாயத்துக்காகவும், பழிக்குப் பழி வாங்க, சொத்துக்காக, காதலுக்காக, கள்ளக் காதலுக்காக என கொலைகள் நடப்பது நாட்டில் சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. ஆனால் பழிக்குப்பழி வாங்குதற்காக செய்யப்படும் கொலைகள் நகரமாக மின்னனு நகரமான பெங்களூரு உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
பெரிய ரவுடிகள், துப்பாக்கிகள் என சுலபமாக கிடைக்கின்ற மும்பையை கூட பெங்களூர் முந்திவிட்டது.கடந்த 2019ம் ஆண்டு பெங்களூரு நகரில் பதிவான 210 கொலைகளில் 106 கொலைகள் மட்டும் பழிக்கு பழி வாங்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களில் கணக்கு காண்பிக்கிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2019ம் ஆண்டு மொத்தம் 505 கொலைகள் பதிவாகி உள்ளது. அதில் 87 கொலைகள் மட்டும் பழிக்கு பழி வாங்குவதற்காக செய்யப்பட்டுள்ளது. இதில் 75% கொலைகள் சொந்த பகை, பழிக்குப்பழிக்காக திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகள் என்று கொலை குற்றாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து டிஜிபி குருபிரசாத் கூறியதாவது: தனிப்பட்ட பகைகள் மூலமாகவே அதிக கொலைகள் நடந்துள்ளது.மேலும் நிலம், பெண் மற்றும் பணத்தை குறியாகக் கொண்டும் கொலைகள் நடந்துள்ளது. தனிப்பட்ட பகை காரணமாக சொந்த குடும்பங்கள், நண்பர்களுக்குள்ளும் கொலைகள் நடந்துள்ளது. பணம், நகைக்காக நடக்கும் கொலைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இக்குற்றவாளிகளிடம் விசாரணை மற்றும்சம்பந்தப்பட்ட கொலையாளியை கைது செய்வது என்பது மிக கடினமானது கிடையாது. நோக்கம் கண்டறியப்பட்டவுடன் குற்றவாளியை கைது செய்வது மிக எளியது என்று கூறினார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…