“நாட்டிற்கு பெருமை சேர்த்த நிஷாத் குமார்” – வாழ்த்திய பிரதமர் மோடி,எம்பி ராகுல்காந்தி…!

Published by
Edison

டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்றதற்கு பிரதமர் மோடி,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வதுபாராலிம்பிக் போட்டிகள்  நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில்,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.இதன்மூலம்,ஆசிய சாதனையை படைத்துள்ளார்.மேலும்,இது பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும்.

இந்நிலையில்,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“டோக்கியோவிலிருந்து மேலும் மகிழ்ச்சியான செய்தி வருகிறது! ஆண்கள் உயரம் தாண்டுதல் டி 47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. அவர் சிறந்த திறமை மற்றும் உறுதி கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க விளையாட்டு வீரர். அவருக்கு வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”தேசிய விளையாட்டு தினத்தில் இந்தியாவிற்கு மற்றொரு வெள்ளி.சிறந்த முயற்சிக்காக நிஷாத் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்தீர்கள்”,என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recent Posts

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

1 hour ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

1 hour ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

2 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

3 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

4 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

4 hours ago