இதுவரை நாடு முழுவதும் 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத் துறை!

நாடு முழுவதும் தற்போது வரையில் என்பது 88.5 லட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாகவும் இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் அவசரகால அனுமதி பெற்று கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 88.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 1,90,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் இதுவரை 88,57,341 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சுகாதார பணியாளர்கள் 61,29,745 பேருக்கு முதல் முறையாகவும், 2,16,339 பேருக்கு இரண்டாம் முறையாகவும் கொரோனா தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025