மகாராஷ்டிராவில் பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் ஆளுநர் முன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எங்களுக்கு பெருபான்மை உள்ளது என கூறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆளுநர் மாளிகையில் கடிதம் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆளுநரின் முடிவை கண்டித்து சோனியாகாந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிராவில் நடந்தது ஜனநாயக படுகொலை என குற்றம்சாட்டி உள்ளனர்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…