மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மகாராஷ்டிரா போலீசார் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் பெரும் உத்தரவை பிறப்பித்துள்ளளது. அது என்னவென்றால் மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மகாராஷ்டிர போலீசார் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உண்மை வெளிவருவது முக்கியம், ஆனால் பரம்பீர் சிங்கும், முன்னாள் உள்துறை அமைச்சரும் ஒருவர் மீது ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டன என்று நீதிமன்றம் கூறியது.
மும்பையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பரம்பீர் சிங் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பரம்பீர் சிங் மீது இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 5 வழக்குகள் இனி சிபிஐ-க்கு செல்லும். கடந்த பல மாதங்களாக, மகாராஷ்டிர அரசும், முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…