காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சரமரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து 370-வதை ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் ,சட்டப்பிரிவு 370-வதை ரத்து செய்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் 6 வழக்குகள் தொடரப்பட்டது.
மேலும் டைம்ஸ் நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் ,கருத்துரிமையை மறுக்கும் வகையில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,பத்திரிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.அப்போது வழக்கறிஞர் எம்.எல். ஷர்மாவின் மனுவை அரை மணி நேரம் படித்தும்,மனுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள்.அந்த மனுவில் உள்ள பிழைகளை சரிசெய்து மீண்டும் மனுதாக்கல் செய்ய வலியுறுத்தினார்கள் நீதிபதிகள்.
அத்துடன் 370-வது சட்டபிரிவு நீக்கத்திற்கு எதிராக மனுக்களில் உள்ள பிழைகளை சரிசெய்து மீண்டும் மனுதாக்கல் செய்ய 6 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டைம்ஸ் நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் வழக்கில் மத்திய அரசு அளித்த பதிலில்,காஷ்மீரில் எந்த பத்திரிக்கைகளும் மூடப்படவில்லை என்று தெரிவித்தது.பின்னர் காஷ்மீர் மாநிலத்திற்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கம் மறுப்பு தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…