புல்வமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. ராணுவ வீரர் காயம்.!

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் கிடைத்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ராணுவ வீரர் காயம் அடைந்தார், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025