அங்கொட லொக்கா மரண வழக்கு.. கைதான 3 பேர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்!

அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் தனது காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் தனது காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், இன்று அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025