ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவந்திபோராவின் மகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும், என்கவுன்டர் நடந்து வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.
இந்த என்கவுன்டர் சம்பவத்தில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டு உள்ளனர். பயங்கரவாதிகளிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. என்று காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்நேற்று முன்தினம் புட்காமின் பகுதியில் நடந்த மோதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார். செப்டம்பர் 17- ம் தேதி, ஸ்ரீநகரின் படமலூ பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025