2500 கிலோ… ரூ.12,000 கோடி.! இந்தியாவில் நுழைய முயன்ற போதை பொருளை அதிரடியாய் பிடித்த அதிகாரிகள்.!

Kerala coast

கேரள கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் கடத்த முயன்ற போதை பொருள் மூட்டைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். 

இந்தியாவுக்குள் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க,  அனைத்து வழிகள் மூலமும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமுத்திரகுப்த் எனும் திட்டத்தின் கீழ், கடல்வழி போக்குவரத்தை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கடற்படை உதவியுடன் கண்காணித்து வந்தனர்.

அப்போது குறிப்பிட்ட பெரிய கப்பலில் போதை பொருள் வருவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கப்பல் கண்காணிக்க பட்டு வந்த நிலையில் இன்று கேரள – மாலத்தீவு கடல் பகுதியில் வந்த கப்பலை இந்திய கடற்படை உதவியுடன் மடக்கி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர்.

அதில், 134 மூட்டைகளில் 2500 கிலோ மெத்தபைட்டமைன் எனும் போதை பொருள் சம்பந்தப்பட்ட வேதிப்பொருள் கிடைத்தது. இதன் மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கப்பலில் போதை பொருள் சம்பந்தமான வேதிப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள், கப்பலில் இருந்த ஒரு பாகிஸ்தானியரை சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்